வேலைவாய்ப்பு

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்...சென்ட்ரல் வங்கியில் உதவித்கொகையுடன் பயிற்சி!

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் உதவித்தொகையுடன் 1 ஆண்டு தொழில் பழகுநர் பயிற்சி

DIN

நாடு முழுவதும் செயல்பட்டு வரும் முன்னணி பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் உதவித்தொகையுடன் 1 ஆண்டு தொழில் பழகுநர் பயிற்சிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து வரும் 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Apprenticeship Training

காலியிடங்கள்: 3000

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 31.3.2020 தேதிக்கு பின்னர் பட்டப்படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

வயதுவரம்பு: 31.3.2024 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு அரசி விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

உதவித்தொகை: மாதம் ரூ.15,000

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள், காலியிடம் ஏற்பட்டுள்ள மாநிலத்தின் உள்ளூர் மொழி பேசும் திறன், நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வின் அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 12 மாதங்களுக்கு உதவித்தொகையுடன் பயிற்சி வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய இடங்களில் காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.

விண்ணப்பக் கட்டணம்: மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.400 + எஸ்டி எஸ்சி, எஸ்டி, அனைத்து பிரிவைச் சேர்ந்த பெண்கள், இடபுள்யுஎஸ் பிரிவினர் ரூ.300 + ஜிஎஸ்டி, மற்ற அனைத்து பிரிவினரும் 800 + ஜிஎஸ்டி 18 சதவிகிதம் சேர்த்து ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.centralbankofindia.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 27.3.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்திரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு!

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பெங்களூரில் 13 வயது சிறுவன் எரித்துக் கொலை! காரணம் என்ன?

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட Kavin உடலுக்கு KN Nehru நேரில் அஞ்சலி!

SCROLL FOR NEXT