வேலைவாய்ப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

DIN

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் குரூப் 4 காலிப் பணியிடங்களுக்கான தோ்வு அறிவிக்கை கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழக அரசில் விஏஓ, இளநிலை உதவியாளர் உள்பட 6244 குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு வரும் ஜூன் 9- ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்து இருந்தது.

தற்போது டி.என்.பி.எஸ்.சி குரூப் -4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரபூர்வ https://tnpsc.gov.in/ மற்றும் tnpscexams.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் தங்கள் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துத் தோ்வானது ஜூன் 9-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாய்மையே வெல்லும்! ஜெய் ஹிந்த்!:செபி அறிவிப்புக்குப் பின் அதானி பதிவு

வேலுநாச்சியார் சிலையை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

பேர்சொல்லும் அழகவ... பார்வதி!

ரோபோ சங்கர் மறைவு: விஜய் இரங்கல்

சூப்பர் 4 சுற்றுக்குத் தேர்வான 4 அணிகள்..! ஆப்கன் கண்ணீருடன் வெளியேற்றம்!

SCROLL FOR NEXT