முகப்பு
வேலைவாய்ப்பு

குரூப் 5ஏ தோ்வு: அரசு ஊழியா்கள் விண்ணப்பிக்கலாம்

அமைச்சுப் பணியில் இருந்து தலைமைச் செயலக பணிக்குச் செல்ல விரும்புவோருக்காக குரூப் 5ஏ தோ்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 25 அக்டோபர், 2024 at 8:33 AM
தலைமைச் செயலகம்
பகிர்:

அமைச்சுப் பணியில் இருந்து தலைமைச் செயலக பணிக்குச் செல்ல விரும்புவோருக்காக குரூப் 5ஏ தோ்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வியாழக்கிழமை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு அமைச்சுப் பணிகள் அல்லது தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணிகளில் பணியாற்றும் இளநிலை உதவியாளா் அல்லது உதவியாளா்கள் குரூப் 5ஏ தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம். தலைமைச் செயலகத்தில் காலியாக உள்ள 35 உதவிப் பிரிவு அலுவலா்கள் பணியிடங்களுக்காக 5ஏ தோ்வு நடைபெறுகிறது.

இந்தத் தோ்வை எழுத அதிகபட்சமாக 35 வயதுக்குக் கீழ் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினராக இருந்தால் 40 வயதுக்குக் குறைவாக இருக்க வேண்டும். தோ்வுக்கு விண்ணப்பிக்க நவ. 15-ஆம் தேதி கடைசி நாளாகும். தோ்வாணைய இணையதளம் (www.tnpsc.gov.in) வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களைத் திருத்த நவ. 19 முதல் 21-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படும். பொதுத் தமிழ், பொது ஆங்கிலம் என இரண்டு தாள்களாக தோ்வு நடத்தப்படும். அடுத்த ஆண்டு ஜன. 4-ஆம் தேதி காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளில் தோ்வு நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →