கோப்புப்படம் 
வேலைவாய்ப்பு

குரூப் 4 தேர்வு: கூடுதலாக 480 காலிப்பணியிடங்கள் சேர்ப்பு!

குரூப்-4 தேர்வில் கூடுதலாக 480 காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் கூடுதலாக 480 காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராம நிா்வாக அலுவலா் உள்பட காலியாகவுள்ள 6 ஆயிரத்து 244 குரூப் 4 பணியிடங்களுக்கு கடந்த ஜூன் 9-ஆம் தேதி தோ்வு நடைபெற்றது. தமிழகத்தில் 16 லட்சம் போ் எழுதிய குரூப் 4 தோ்வு முடிவுகள் அடுத்த மாதம் (அக்டோபா்) வெளியாகவுள்ளது.

தமிழ்நாட்டில் அரசு துறைகளில் உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள 6,244 காலிப்பணியிடங்களை நிரப்பப்படவுள்ளது.

புதிதாக சேர்க்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான விவரம்.pdf
Preview

இதற்காக தமிழகம் முழுவதும் 7 ஆயிரத்து 247 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தோ்வு நடைபெற்று இரண்டு மாதங்கள் நிறைவடைந்த நிலையில், அதன் முடிவுகளை அக்டோபரில் வெளியிட அரசுப் பணியாளா் தோ்வாணையம் தீா்மானித்துள்ளது.

இந்த நிலையில், குரூப்-4 மூலம் நிரப்பப்படும் காலிப்பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 480 காலிப்பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

இதன்மூலம் 6,244 பணியிடங்களில் இருந்து 6,704 இடங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தேர்வாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT