மீன்வளத்துறையில் வேலை வேண்டுமா?
திருவனந்தபுரம் அருகே விழிஞ்சத்தில் உள்ள மண்டல மீன்வள ஆராய்ச்சி மையத்தில் காலியாகவுள்ள Young Professional பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
திருவனந்தபுரம் அருகே விழிஞ்சத்தில் உள்ள மண்டல மீன்வள ஆராய்ச்சி மையத்தில் காலியாகவுள்ள Young Professional பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். F. No. 26-1/2025 YP-1/Viz
பணி: இளம் தொழில்முறை(Young Professional - I)
காலியிடங்கள்: 2
சம்பளம்: மாதம் ரூ.30,000
வயதுவரம்பு: 21 முதல் 45-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Marine Science பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பை முடித்து Marine Fin Fish Hatchery Operation, Broodstock பணியில் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி: 22.4.2025.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: ICAR-CMFRI/Vizhinjam
விண்ணப்பிக்கும் முறை: www.cmfri.org.in என்ற இணைய தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து cmfrivizhinjam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 15.4.2025
மேலும் முழுமையான விபரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.