NPCIL 
வேலைவாய்ப்பு

இந்திய அணுசக்திக் கழகத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

மும்பையில் உள்ள இந்திய அணுசக்திக் கழக (என்பிசிஐஎல்) தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள 400 அலுவலர் பணியிடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து

DIN

மும்பையில் உள்ள இந்திய அணுசக்திக் கழக (என்பிசிஐஎல்) தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள 400 அலுவலர் பணியிடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: NPCIL/HQ/HRMET/2025/02

பணி: Executive Trainee (GATE - 2025)

காலியிடங்கள்: 400

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பாடப்பிரிவுகள் அல்லது அதற்கு இணையான பாடப்பிரிவுகளில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ,பி.டெக் முடித்திருக்க வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்பை கொடுக்கப்பட்டுள்ளதை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

உதவித்தொகை: பயிற்சியின் போது மாதம் ரூ.74,000 வழங்கப்படும்.

வயதுவரம்பு: 30.4.2025 தேதியின்படி 26 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: 2023, 2024, 2025 ஆண்டுகளில நடைபெற்ற கேட் தேர்வுகள் ஏதாவதொன்றில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவர். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு ஆண்டு பயிற்சி வழங்கப்படும். பின்னர் பணி நிரந்தரம் செய்யப்படும் தகுதியானவர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம், தேதி போன்ற விபரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. பொது,ஓபிசி, இடபுள்யுஎஸ் பிரிவைச் சேர்ந்த ஆண்கள் மட்டும் கட்டணம் செலுத்தவும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர், பெண்கள், முன்னாள் ராணுவத்தினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.npcil careers.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.4.2025

மேலும் கூடுதல் விபரங்களுக்கு இங்க கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT