இந்தியன் வங்கியில் 1500 பட்டதாரிகளுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி!
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கியில் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு தொழில் பழகுநர் பயிற்சி
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கியில் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு தொழில் பழகுநர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ள பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சியின் பெயர்: Apprenticeship
மொத்த காலியிடங்கள்: 1500
Advertisement
Advertisement
உதவித்தொகை: பயிற்சியின் போது மாதம் ரூ.12,000 முதல் ரூ.15,000 வரை வழங்கப்படும்
வயது வரம்பு: 20 முதல் 28-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் வயது வரம்பு மற்றும் தகுதி ஆகியவை 1.7.2025 தேதியின் படி கணக்கிடப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
தமிழ்நாட்டில் எழுத்துத்தேர்வு நடைபெறும் இடங்கள்:
சென்னை, மதுரை, சேலம்,திருநெல்வேலி, வேலூர், திருச்சி, கோவை, விருதுநகர், தஞ்சாவூர்.
எழுத்துத்தேர்வு தொடர்பான இதர விபரங்கள் மின்னஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி,எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்கள் ரூ.175, இதர அனைத்து பிரிவினரும் ரூ.800 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிப்போர் முதலில் தங்களது தகுதி பற்றிய விபரங்களை www.nats.educat ion.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பின்னர் www.indianbank.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 7.8.2025
மேலும் கூடுதல் விபரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
INDIAN BANK, a leading Public Sector Bank, with headquarters in Chennai invites Applications from the eligible candidates for the engagement of apprentices, under Apprentices Act, 1961 and as per Engagement of Apprenticeship policy of the Bank.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.