மயிலாடுதுறை மாவட்டத்தில் சமூகநலம் மற்றும் மகளிா் உரிமைத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சமூகநலம் மற்றும் மகளிா் உரிமைத்துறையின் மிஷன் சக்தி திட்டத்தில், மாவட்ட மகளிா் அதிகார மையம் மகளிருக்கான மத்திய, மாநில அனைத்து திட்டங்களின் செயல்பாடு நிதி ஒதுக்கீடு மற்றும் அவற்றின் பயன்கள் குறித்து கண்காணிக்கவும், ஒருங்கிணைந்து சேவைகள் புரிந்திடவும் மாவட்ட சமூகநல அலுவலரின்கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய கீழ்க்காணும் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணி: தகவல் தொழில்நுட்ப உதவியாளா்
காலியிடம்: 2
தகுதி: இப்பணிக்கு கணினி பயிற்சி சான்றிதழ் பெற்ற, 35 வயதுக்கு மிகாத, கணினி அறிவியல் தகவல் தொழில்நுட்பம், கணினி பயன்பாடு இளங்கலைப் பட்டம் பெற்று குறைந்தபட்சம் 3 வருடம் தரவு மேலாண்மை செயல்முறை ஆவணங்கள், இணைய அடிப்படையிலான தயாரித்தல் அல்லது அரசு சாரா தொண்டு நிறுவனங்களிலோ, திட்டத்திலோ பணிபுரிந்த முன் அனுபவம் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம். தொகுப்பூதியம் மாதம் ரூ.20,000 வழங்கப்படும்.
பணி: பல்நோக்கு பணியாளா் காலியிடம்: 1
தகுதி: இந்த பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு வாரியத்திலிருந்தும் 10 அல்லது 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொகுப்பூதியம் மாதம் ரூ.12,000 வழங்கப்படும். விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்படிவத்தினை Mayiladuthurai.in என்ற மயிலாடுதுறை மாவட்ட இணையதத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்த விண்ணப்பத்தினை, மாவட்ட சமூகநல அலுவலா், மாவட்ட சமூகநல அலுவலகம், 5-ஆம் தளம், அறை எண்: 524, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மயிலாடுதுறை என்ற முகவரியில் ஆக.22-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். மயிலாடுதுறை மாவட்டத்தில் வசிப்பவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.