சென்னை மற்றும் மதுரை மாவட்டங்களிலுள்ள அரசு வழக்குகள் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து 14 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்த விபரம் வருமாறு:
பணியின் பெயர்: Office Assistant
காலியிடங்கள்: 16
வயது வரம்பு: 1.7.2025 தேதியின்படி 18 முதல் 32-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி மற்றும் டிஎன்சி பிரிவினர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிமுறைப்படி வயது வரம்பு சலுகை வழங்கப்படும்.
தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் படிக்க, எழுத தெரிந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் ரூ.50-க்கான தபால் தலை ஒட்டப்பட்ட சுய முகவரி எழுதப்பட்ட தபால் கவருடன் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Advocate General of Tamil Nadu, High Court, Chennai - 600 104
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 14.8.2025
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.