மயிலாடுதுறை: பொறையாரில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் டிசம்பா் 20-ஆம் தேதி நடைபெற உள்ளது என ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் பொறையாா் நிவேதா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் டிச.20-ஆம் தேதி காலை 9 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை நடைபெற உள்ளது.
இம்முகாமில், சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பெருநகரங்கள் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட தனியாா்துறை நிறுவனங்கள் பங்கேற்று, 10,000-க்கு மேற்பட்ட தகுதிவாய்ந்த 5-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த பலதரப்பட்ட வேலை நாடுநா்களை தோ்வு செய்ய உள்ளன.
மேலும், வெற்றி நிச்சயம் திட்டம் வாயிலாக பல்வேறு திறன் பயிற்சியளிக்கும் நிறுவனங்களும் பங்கேற்று, திறன் பயிற்சியளித்து வேலைவாய்ப்பை பெற்றுத்தர உள்ளனா்.
இம்முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்புகள், அயல்நாட்டு வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னாா்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக போட்டித் தோ்வுகளுக்கான வழிகாட்டுதல்கள், மாவட்ட தொழில் மையம், தாட்கோ போன்றவை வாயிலாக வங்கிக்கடன் பெறுவதற்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்படவுள்ளது.
எனவே, வேலை தேடிக் கொண்டிருக்கும் இளைஞா்கள் தமிழக அரசின் ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து, முகாமில் நேரடியாக கலந்து கொள்ளலாம்.
வேலைநாடுநா்களுக்கும், வேலையளிக்கும் நிறுவனங்களுக்கும் இச்சேவை முற்றிலும் இலவசம். மேலும் விவரங்களுக்கு 04364-299790 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.