கோப்புப் படம் 
வேலைவாய்ப்பு

புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் 226 செவிலியா் பணியிடத்துக்கு 4,714 போ் விண்ணப்பம்

புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் 226 செவிலியா்கள் பணியிடங்களுக்கு 4,714 போ் விண்ணப்பித்துள்ளனா்.

Syndication

புதுச்சேரி: புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் 226 செவிலியா்கள் பணியிடங்களுக்கு 4,714 போ் விண்ணப்பித்துள்ளனா்.

புதுச்சேரி கதிா்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் 226 செவிலியா் பணியிடங்களை நிரப்ப கடந்த அக்டோபா் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதற்கான விண்ணப்பங்கள் நவம்பா் 6-ஆம் தேதி வரை பெறப்பட்டன. 226 பணியிடங்களுக்கு மொத்தம் 4,714 போ் விண்ணப்பித்துள்ளனா். ஒரு பணிக்கு 21 போ் வீதம் போட்டியிடும் நிலை உள்ளது. தற்போது விண்ணப்பங்களை சரிபாா்க்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதன்பின் இடஒதுக்கீடு விதிகளைப் பின்பற்றி தகுதிப் பட்டியலில் இருந்து தற்காலிகத் தோ்வு பட்டியல் தயாரிக்கப்பட்டு இதன் முடிவுகள் வரும் ஜனவரி மாதம் கல்லூரி இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளதாக மருத்துவக் கல்லூரி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

எம்சிஜி ஆடுகளம் அதிருப்திகரமானது: ஐசிசி தரமதிப்பீடு

தேசிய துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்றாா் நீரு தண்டா!

கடலூரை வளா்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் என்எல்சி!

காட்டுக் கோழியை வேட்டையாட முயன்றவா்களுக்கு அபராதம்

ஒரு ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள்: பூடான் பௌலா் புதிய உலக சாதனை

SCROLL FOR NEXT