வேலைவாய்ப்பு

அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழ்நாட்டில் உள்ள சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு

DIN

தமிழ்நாட்டில் உள்ள சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து மார்ச் 3 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Associate Professor

காலியிடங்கள்: 8

சம்பளம்: மாதம் ரூ.1,31,400 - 2,17,100

வயதுவரம்பு: 45-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Assistant Professor

காலியிடங்கள்: 64

சம்பளம்: மாதம் ரூ. 68,900 - 2,05,500

வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Assistant Professor(Pre-Law)

காலியிடங்கள்: 60

சம்பளம்: மாதம் ரூ. 57,700 - 1,82,400

வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள சட்டப் பிரிவுகள் அல்லது கலை அறிவியல் பாடப்பிரிவுகளில் ஏதாவதொரு பிரிவில் முதுகலை பட்டம் பெற்றும் நெட் அல்லது செட் தேர்வில் தேர்ச்சி பெற்று குறைந்தது 8 ஆண்டுகள் உதவிப் பேராசிரியராக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தமிழ்மொழி திறனறியும் தேர்வு, முக்கிய பாடப்பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வு தோராயமாக 11.5.2025 இல் நடைபெறும். எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் மதிப்பெண் விவரங்களை இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பக்க கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.300. இதர பிரிவினர்கள் ரூ.500 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.trb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 3.3.2025

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT