வேலைவாய்ப்பு

வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க... மத்திய சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தில் வேலை!

மத்திய அரசின் நவரத்தின மதிப்பைப் பெற்ற பொதுத்துறை நிறுவனமான மத்திய சேமிப்புக் கிடங்கு நிறுவத்தின் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு

DIN

மத்திய அரசின் நவரத்தின மதிப்பைப் பெற்ற பொதுத்துறை நிறுவனமான மத்திய சேமிப்புக் கிடங்கு நிறுவத்தின் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய சேமிப்புக் கிடங்கு கழகம் 1957 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. நாடு முழுவதும் 467 கிடங்குகள் செயல்படுகிறது. இங்கு 10.3 மில்லியன் டன் சேமிப்பு திறன் கொண்ட உணவு தானிய கிடங்குகள், தொழிற்சாலை சேமிப்பு கிடங்குகள், சேமிப்பு, சரக்கு பெட்டி நிலைய கிடங்குகள், உள்நாட்டு அனுமதிச் சீட்டு மற்றும் வான் சரக்கு கிடங்குகளின் சேவைகளும் அடங்கும்.

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். CWC/1-Manpower/DR/Rectt/2024/01

மொத்த காலியிடங்கள்: 179

பணி மற்றும் இதர விவரங்கள்:

பணி: Management Trainee (General)

காலியிடங்கள்: 40

பணி: Management Trainee (Technical)

காலியிடங்கள்: 13

சம்பளம்: மாதம் ரூ.60,000 - 1,80,000

பணி: Accountant

காலியிடங்கள்: 9

சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000

பணி: Superintendent (General)

காலியிடங்கள்: 22

பணி: Superintendent (General)- SRD (North-Eastern Region states)

காலியிடங்கள்:2

சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000

பணி: Junior Technical Assistant (JTA)

காலியிடங்கள்: 81

பணி: Junior Technical Assistant (JTA) – SRD (North-Eastern Region states)

காலியிடங்கள்: 10

பணி: Junior Technical Assistant (JTA) – SRD (UT of Ladakh)

காலியிடங்கள்: 2

சம்பளம்: மாதம் ரூ.29,000 - 93,000

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். முழுமையான விவரங்களை அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயதுவரம்பு: 12.1.2025 தேதியின்படி மேலாண்மை டிரெய்னி, இளநிலை டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கு 28-க்குள்லும், கணக்காளர், கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கு 30-க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, வேலூர்.

விண்ணப்பக் கட்டணம்: பெண்கள், எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.500, இதர அனைத்து பிரிவினரும் ரூ.1350 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.cwceportal.com/careers என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 12.1.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேரிலிண் மன்ரோ லுக்... ஓவியா!

சலம்பல பாடல் புரோமோ!

2-வது போட்டியில் மே.இ.தீவுகள் வெற்றி; சமனில் டி20 தொடர்!

ரசிகர்களின் அன்பை சுயலாபத்துக்காக பயன்படுத்த மாட்டேன்! -நடிகர் அஜித்குமார்

ஊரும் லிரிக்கல் பாடல் வெளியானது!

SCROLL FOR NEXT