பாரத ஸ்டேட் வங்கி 
வேலைவாய்ப்பு

எஸ்பிஐ வங்கியில் வேலை வேண்டுமா?: காலியிடங்கள் 151

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள வணிக நிதி அலுவலர், துணை மேலாளர் (காப்பக நிபுணர்)பணிக்கான வேலைவாய்ப்பு

DIN

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள வணிக நிதி அலுவலர், துணை மேலாளர் (காப்பக நிபுணர்)பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Trade Finance Officer (MMGS-II)

காலியிடங்கள்: 150

சம்பளம்: மாதம் ரூ. 64,820 - 93,960

தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளங்கலை பட்டம் முடித்திருப்பதுடன் ஐஐபிஎப் வழங்கும் Forex சான்றிதழ் பெற்றிருப்பதுடன் இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 31.12.2024 தேதியின்படி 23 முதல் 32-க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

பணி: Deputy Manager (Archivist) - 1

தகுதி: குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் நவீன இந்திய வரலாற்றில் சிறப்புப் பாடத்துடன் வரலாற்றில் முதுகலை பட்டம் (கி.பி. 1750-க்கு பிந்தைய காலம்) பெற்றிருக்க வேண்டும். காப்பக மேலாண்மை, பொதுப் பதிவு மேலாண்மை, பாதுகாப்பு, மறுபதிவு, தனியார் ஆவணக் காப்பகம், வணிக ஆவணக் காப்பகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் பிரிவில் முதுகலை டிப்ளமோ, டிப்ளமோ, இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் சம்மந்தப்பட்ட துறையில் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.64,820 - 93,960

வயதுவரம்பு: 31.12.2024 தேதியின்படி 27 முதல் 37-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு, பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 6 மாதம் பயிற்சிக்கு பின்னர் பணி நிரந்தரம் செய்யப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதர அனைத்து பிரிவினரும் ரூ.750 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.bank.sbi/careers அல்லது https://bank.sbi/web/careers/current-openings என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 23.1.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திசையன்விளை அஞ்சலகத்தில் இணைய சேவை பாதிப்பு: மக்கள் அவதி

தில்லி முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

கைதிகளின் பற்களை பிடுங்கிய வழக்கு: பல்வீா் சிங் ஆஜா்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சிறப்பு உதவி ஆய்வாளருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனைக்கு இடைக்காலத் தடை

தூய்மைப் பணியாளா்கள் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை: ஆட்சியா் உத்தரவு

SCROLL FOR NEXT