வேலைவாய்ப்பு

தோல் ஆராய்ச்சி மையத்தில் எம்டிஎஸ் பணி: விண்ணப்பிக்க தகுதிகள் என்ன?

மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சின் கீழ்(சிஎஸ்ஐஆர்) செயல்பட்டு வரும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை சிஎஸ்ஐஆர்-மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (சிஎல்ஆர்ஐ) என்பது, மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சித் துறையின் (டிஎஸ்ஐஆர்) கீழ் செயல்படும் ஒரு தன்னாட்சி அமைப்பான அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கழகத்தின் (சிஎஸ்ஐஆர்) ஒரு முதன்மை நிறுவனமாகும்.

இந்நிறுவனத்தில் தற்போது இளநிலை சுருக்கெழுத்தாளர், செயலக உதவியாளர், எம்டிஎஸ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிஎல்ஆர்ஐ வெளியிட்டுள்ள அறிக்கையில்,மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 1 இளநிலை சுருக்கெழுத்தாளர், 6 இளநிலை செயலக உதவியாளர், 6 எம்டிஎஸ் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடம் மார்ச்.2 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது தொடர்பான விவரங்களைப் பார்ப்போம்...

அறிவிப்பு எண்.2/2026

பணி: Junior Stenographer

காலியிடங்கள்: 1

சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100

வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் சுருக்கெழுத்து எழுதும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.

பணி: Junior Secretariat Assistant(G)

காலியிடங்கள்: 2

பணி: Junior Secretariat Assistant(S&P)

காலியிடங்கள்: 3

பணி: Junior Secretariat Assistant (F&A)

காலியிடங்கள்: 1

சம்பளம்: மாதம் ரூ. 19,900 - 63,200

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Multi Tasking Staff(MTS)

காலியிடங்கள்: 6

சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 25-க்குள் இருக்க வேண்டும்.

வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் சான்றிதழ் சர்பார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினர், பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: recruitment.clri.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 2.3.2026

விண்ணப்பிப்போரின் மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

CLRI invites ONLINE application from enthusiastic, talented Indian citizens to fill the following administrative posts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தானில் எலான் மஸ்க்கின் நிறுவனத்தை அனுமதிப்பதில் தயக்கம் காட்டும் அரசு! என்ன காரணம்?

அமெரிக்க வணிக ஒப்பந்தத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு : பிப். 12-ல் நாடு தழுவிய போராட்டம்!

2-ஆம் உலகப்போரில் சிங்கப்பூருக்காகப் போராடி வீரமரணமடைந்த சீக்கியர்களுக்கு நினைவஞ்சலி!

"கடக ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

தோல்வி பயத்தைக் காட்டிய நேபாளம்; போராடி வென்றது இங்கிலாந்து!

SCROLL FOR NEXT