FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் டெக்னிக்கல் பணி: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?

மத்திய மின்சார ஆராய்ச்சி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள காலிப்பணியிடங்கள் தொடர்பாக...

மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் டெக்னிக்கல் பணி - CPRI
பகிர்:

மின்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பு மத்திய மின்சார ஆராய்ச்சி நிறுவனம். இந்நிறுவனம் மின் உற்பத்தி, கடத்தல், விநியோகம் மற்றும் மின் விநியோக அமைப்புகளின் செயல்பாடுகள் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

மின் ஆற்றல் பொறியியல் துறையில் பயன்பாட்டு ஆராய்ச்சியைத் தொடங்கி ஒருங்கிணைப்பதிலும், தயாரிப்பு மேம்பாடு மற்றும் தர உத்தரவாதத்தில் மின்சாரத் துறைக்கு உதவுவதிலும் மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனம் ஒரு முதன்மை அமைப்பாகச் செயல்படுகிறது.

மேலும், மின்சார உபகரணங்களைச் சோதனை செய்தல் மற்றும் சான்றளிப்பதற்கான ஒரு சுயாதீன அமைப்பாகவும் செயல்படுகிறது. இதன் தலைமையகம் பெங்களூருவில் அமைந்துள்ளது; போபால், ஹைதராபாத், நாக்பூர், நாசிக், நொய்டா, கொல்கத்தா, குவஹாத்தி மற்றும் ராய்ப்பூர் ஆகிய இடங்களில் கிளை அலுவலகங்கள் அமைந்துள்ளன.

Advertisement

Advertisement

இந்த நிறுவனங்களில் காலியாக உள்ள டெக்னிக்கல் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: CPRI/06/2026

மொத்த காலியிடங்கள்: 110

பணி: Engineering Officer Gr.1 (Electrical)

காலியிடங்கள்: 7

சம்பளம்: மாதம் ரூ. 44,900 - 1,42,400

பணி: Engineering Officer Gr.1 (Civil)

காலியிடங்கள்: 1

சம்பளம்: மாதம் ரூ. 44,900 - 1,42,400

பணி: Engineering Assistant (Electrical)

காலியிடங்கள்: 10

சம்பளம்: மாதம் ரூ. 35,400 - 1,12,400

பணி: Engineering Assistant (Mechanical)

காலியிடங்கள்: 10

சம்பளம்: மாதம் ரூ. 35,400 - 1,12,400

பணி: Scientific Assistant

காலியிடங்கள்: 2

சம்பளம்: மாதம் ரூ. 35,400 - 1,12,400

பணி: Technician Gr.1 (Electrical)

காலியிடங்கள்: 7

சம்பளம்: மாதம் ரூ. 19,900 - 63,200

பணி: Technician Gr.1 (Mechanical)

காலியிடங்கள்: 2

சம்பளம்: மாதம் ரூ. 19,900 - 63,200

பணி: Technical Attendant Gr.1

காலியிடங்கள்: 37

சம்பளம்: மாதம் ரூ. 18,000 - 56,900

பணி: Assistant Gr. II

காலியிடங்கள்: 29

சம்பளம்: மாதம் ரூ. 25,500 - 81,100

பணி: Multi-Tasking Staff (MTS) Gr.1(Watch & Ward Duties)

காலியிடங்கள்: 14

சம்பளம்: மாதம் ரூ. 18,000 - 56,900

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு, ஐடிஐ, பொறியில் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ, பிஇ, பி.டெக், இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு: 12.10.2026 தேதியின்படி 18 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://cpri.res.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 1000 எஸ்சி, எஸ்டி, பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 12.10.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

CPRI invites on-line applications from the eligible Indian Nationals for filling up of vacancies..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments