SAIL 
வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..?: செயில் நிறுவனத்தில் டெக்னிக்கல் உதவியாளர் பணி!

டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து இன்றைக்குள்(ஜன.31) ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள்

DIN

தேசிய அனல் மின் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட்டில் காலியாக உள்ள டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து இன்றைக்குள்(ஜன.31) ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண்.4/2024

பணி: Technical Assistant

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. Mechanical - 14

2. Electrical - 9

3. Chemistry - 3

4. C & I - 7

தகுதி: பொறியியல் துறையில் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள பிரிவுகளில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்து இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வேதியியல் துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.60,000

வயதுவரம்பு: 31.1.2025 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் கட்டணம் செலுத்த வேண்டாம்.

விண்ணப்பிக்கும் முறை: https//www.nspcl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 31.1.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT