குரூப்- 2, 2 ஏ முதல் நிலைத் தேர்வுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.
உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர், வனவர், வணிக வரித்துறை உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு நடத்தப்படும் குரூப் 2, 2ஏ-க்கான முதல் நிலைத் தேர்வு செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, கூட்டுறவுத் துறையில் முதுநிலை ஆய்வாளர், இந்து சமய அறநிலையத் துறையில் தணிக்கை ஆய்வாளர், உள்ளாட்சி நிதி தணிக்கையில் உதவி ஆய்வாளர், அமைச்சுப் பணியாளர்களில் உதவியாளர்கள், இளநிலை கணக்காளர் போன்ற பணியிடங்கள் குரூப் 2-ஏ பிரிவின் கீழ் வருகின்றன.
மொத்தமாக 645 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுக்கு இன்று (ஜூலை 15) முதல் ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வுக்கு https://www.tnpsc.gov.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.