முகப்பு
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தோ்வு - கோப்புப்படம்
வேலைவாய்ப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 6 ஜூன், 2025 at 6:49 AM
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தோ்வு - கோப்புப்படம்
பகிர்:

சென்னை: தமிழகத்தில் நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்சி) நடத்தப்படவுள்ள குரூப் 1 முதல்நிலை தோ்வுக்கு விண்ணப்பித்தவர்கள், அதிகாரப்பூர்வ டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

70 காலிப்பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தோ்வு ஜூன்15-இல் நடைபெறுகிறது.

அண்மையில், குரூப் 1 மற்றும் குரூப் 1ஏ காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருந்தது. இதில், துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட 8 முக்கிய பதவிகளுக்கும் தேர்வுகள் நடத்தப்பட விருப்பதால் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தேர்வர்கள் தங்கள் ஹால் டிக்கெட்டுகளை tnpsceexams.in என்ற இணையதளத்தில், விண்ணப்ப எண், தேர்வரின் பிறந்த தேதி ஆகியவற்றை சரியாக உள்ளீடு செய்து ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →