இந்திய அணுசக்தி கழகம் 
வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..?. என்பிசிஐஎல் நிறுவனத்தில் +2, ஐடிஐ, டிப்ளமோ, பட்டதாரிகளுக்கு வேலை

என்பிசிஐஎல் நிறுவனத்தில் 197 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

DIN

இந்திய அணுசக்தி கழகத்தின்கீழ் குஜராத் மாநிலம் மாண்ட்வி, சூரத் மற்றும் தபி நதிக்கு அருகாமையில் அமைந்துள்ளது கக்ரபார் அணுமின் நிலையம். இது கூடங்குளம் அணுமின் நிலையத்திற்குப் பிறகு நாட்டின் இரண்டாவது பெரிய அணு மின் நிலையமாக மாறியுள்ளது. இந்த நிலையத்தில் 220 மெகாவாட் திறன் கொண்ட கனநீர் உயர் அழுத்த அணுஉலைகள் மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகின்றன. இதற்கான திட்டப் பணிகள் 1984 ஆம் ஆண்டில் தொடங்கிய நிலையில், முதல் உலை 1992 ஆம் ஆண்டு செப்டம்பரிலும், இரண்டாம் உலை 1995 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கனடாவின் காண்டு வகையிலான இவ்வுலைகள் மிகவும் தொழில்நுட்ப நேர்த்தியுடனும், நல்ல செயல்திறனுடனும் செயல்பட்டு வருகின்றது. இந்த ஆலையை நிறுவுவதற்கு சுமார் ரூ.13.45 பில்லியன் பணம் செலவிடுப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்தில் 197 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு +2, ஐடிஐ, பட்டயம், பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது பற்றிய விபரம் வருமாறு:

விளம்பர எண். NPCIL/KAKRAPAR GUJARAT SITE/HRM/01/2025

மொத்த காலியிடங்கள்: 197

பணி: Assistant grade 1 (HR/F&A/C&MM)

காலியிடங்கள்: 20

தகுதி: குறைந்தது 50 சதவிகித திப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.25,000

வயது வரம்பு: 21 முதல் 28-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Stipendiary Trainee, Scientific Assistant (Cat - 1)

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பொறியியல் பாடப்பிரிவுகள் ஏதாவதொன்றில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.35,400

வயது வரம்பு: 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Stipendiary Trainee, Scientific Assistant (Science Graduates) (Cat -1)

காலியிடங்கள்: மேற்கண்ட இரண்டு பணியிடங்களுக்கும் 11 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதி: இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகியவற்றை முக்கிய பாடமாக கொண்டு குறைந்தது 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.35,400

வயதுவரம்பு: 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Stipendiary Trainee (Technician) (Cat - II)

தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் குறைந்தது 50 சதவிகித மதிப் பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.27,700

வயது வரம்பு: 18 முதல் 24-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Stipendiary Trainee, Technician (Cat - II)

காலியிடங்கள்: மேற்கண்ட இரண்டு பணியிடங்களுக்கும் 166 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் காலியிடம் ஏற்பட்டுள்ள டிரேடுகள் ஏதாவதொன்றில் 2 ஆண்டு ஐடிஐ முடித்து ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.21,700

வயதுவரம்பு: 18 முதல் 24-க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பத்தாரர்கள் கல்வி, தொழில்நுட்ப படிப்புகள் அனைத்தும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பெற்றதாக இருக்க வேண்டும். கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். அடிப்படை கணினி பயிற்சி பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, தொழிற்திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வில் பொது விழிப்புணர்வு, தொழிற்பாடப் பிரிவில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத்தேர்வு ஆன்லைன் முறையில் நடத்தப்படும். எழுத்துத்தேர்வு தொடர்பான விபரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: Scientific Assistant, Stipen-diary Trainee (Category - 1) பணிக்கு ரூ.150. இதர பணி ளுக்கு ரூ.100 மட்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.npcilcareers.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 17.06.2025

மேலும் விபரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிஸ் படத்தின் இசை வெளியீடு!

எப்போதும் ராணி நான்... ஸ்ரேயா!

றெக்க றெக்க பாடல்!

வரி விதிப்பால் 7 போர்களை நிறுத்தியுள்ளேன்: டிரம்ப்

வேடுவன் இணையத் தொடர்!

SCROLL FOR NEXT