Center-Center-Chennai
வேலைவாய்ப்பு

தனியார் நிறுவனங்கள், வேலை நாடுநா்கள் கவனத்திற்கு...

நாகை மாவட்டத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவனங்கள், வேலை நாடுநா்கள் தங்களது விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்

Din

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவனங்கள், வேலை நாடுநா்கள் தங்களது விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகை மாவட்டத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவனங்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் வேலை நாடுநா்களுக்கான பிரத்யேக இணையதள முகவரி (https://www.tnprivatejobs.tn.gov.in) -இல் நிறுவன விவரங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும், தங்களது நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிட விவரங்களை, அவ்வப்போது அந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இதேபோல், நாகை மாவட்டத்தைச் சோ்ந்த வேலைநாடுநா்கள் (https://www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதளத்தில், தங்களது கல்வி விவரங்களை பதிவு செய்து, தனியாா்துறை நிறுவனங்களில் அவ்வப்போது ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்து வேலைவாய்ப்பினை பெறலாம் என்று குறிப்பிட்டுள்ளாா்.

கரூர் பலி: செந்தில் பாலாஜி விளக்கம் சந்தேகத்தை எழுப்புகிறது; அண்ணாமலை

9 மாநிலங்களுக்கு ரூ. 4,645.60 கோடி புனரமைப்புத் திட்ட நிதி - உயர்மட்டக் குழு ஒப்புதல்

கேரளம்: மீன்பிடி படகு மீது கப்பல் மோதியதால் பரபரப்பு

ராமர், பிரதமர் மோடி குறித்து அவதூறு விடியோ: உ.பி.யில் இளைஞர் கைது

இன்ஸ்டாகிராம் பதிவால் இளைஞர் சுட்டுக் கொலை!

SCROLL FOR NEXT