வேலைவாய்ப்பு

ரப்பர் வாரியத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

ரப்பர் வாரியத்தில் நிரப்பப்பட உள்ள 40 களப் பணியாளர்(Field Officer) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

DIN

மத்திய அரசின் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின்கீழ் கேரள மாநிலம் கோட்டயத்தில் செயல்பட்டு வரும் ரப்பர் வாரியத்தில் நிரப்பப்பட உள்ள 40 களப் பணியாளர்(Field Officer) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Field Officer

காலியிடங்கள்: 40

சம்பளம்: மாதம் ரூ.9,300-34,800

வயது வரம்பு: 1.1 2025 தேதியின்படி 30-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: விவசாயத் துறையில் இளங்கலைப் பட்டம் அல்லது தாவரவியல் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.recruitments.rubber board.org.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.3.2025

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை படித்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுவையிலும் தரத்திலும் மனதை நிரப்பியதா? இட்லி கடை - திரை விமர்சனம்

இதயப்பூர்வம்... மடோனா செபாஸ்டியன்!

விஜய் மீது செருப்பு வீசப்பட்டது ஏன்? - செந்தில் பாலாஜி விளக்கம்!

மதுபாட்டிலுக்கு ரூ. 10 வசூல்: செந்தில் பாலாஜி விளக்கம்!

தேரே இஷ்க் மெய்ன் டீசர்!

SCROLL FOR NEXT