வேலைவாய்ப்பு

மிஸ் பண்ணிடாதீங்க... இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை!

மத்திய அரசு நிறுவனமான இந்திய விமான நிலைய ஆணையத்தில்(ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா) நிரப்பப்பட உள்ள 309 இளநிலை அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

DIN

மத்திய அரசு நிறுவனமான இந்திய விமான நிலைய ஆணையத்தில்(ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா) நிரப்பப்பட உள்ள 309 இளநிலை அலுவலர் பணியிடங்களுக்கு இளநிலை பட்டதாரிகள், பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். 02/2025/CHQ

பணி: Junior Executive(Air Traffic Control)

காலியிடங்கள்: 309

சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000

தகுதி: இயற்பியல், கணிதப் பாடங்களை முக்கிய பாடமாகக் கொண்டு பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும். போதுமான அளவு ஆங்கில அறிவு பெற்றிருக்க வேண்டும் அல்லது பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 24.5.2025 தேதியின்படி 27-க்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஏர்போர்ட் அத்தாரிட்டியால் ஆன்லைன் முறையில் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, மொழித் திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவத் தகுதித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.aai.aero என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 24.5.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்டிபிசி நிறுவனத்தில் டிரெய்னி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

செங்கோட்டையன் பதவிப் பறிப்புக்கு எதிர்ப்பும் கொண்டாட்டமும்!

அமெரிக்காவுடனான உறவு சீர்குலையக் கூடாது: அகிலேஷ் யாதவ்

2-வது டி20: ஜிம்பாப்வே அபார பந்துவீச்சு; 80 ரன்களுக்கு ஆட்டமிழந்த இலங்கை!

தேனிலவுக் கொலை வழக்கு: 790 பக்க குற்றப்பத்திரிகை! | Honeymoon murder

SCROLL FOR NEXT