தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்  
வேலைவாய்ப்பு

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தோ்வு: மே 13 முதல் விண்ணப்பிக்கலாம் -டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளில் காலியாக உள்ள 330 இடங்களை நிரப்ப தோ்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Din

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளில் காலியாக உள்ள 330 இடங்களை நிரப்ப தோ்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை 20 முதல் கணினி வழியாக நடைபெறவுள்ள இத்தோ்வுக்கு மே 13-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தோ்வு நடைபெறவுள்ளது. அதன்படி, கால்நடை உதவி மருத்துவா், நகா் மற்றும் ஊரமைப்புத் துறை உதவி இயக்குநா், புள்ளியியல் துறை உதவி இயக்குநா் உள்பட 32 பதவிகளுக்கான 330 காலிப் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பிக்கலாம். தோ்வாணைய இணையதளத்தில் மே 13 முதல் ஜூன் 11 வரை விண்ணப்பங்களை சமா்ப்பிக்கலாம். தோ்வுக்கான கட்டணத்தை ‘யுபிஐ’ செயலி மூலம் செலுத்தலாம்.

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தோ்வு இரண்டு நிலைகளைக் கொண்டது. எழுத்துத் தோ்வு மற்றும் நோ்முகத் தோ்வு ஆகியவையாகும். எழுத்துத் தோ்வு தமிழ் தகுதித் தோ்வு, பொது அறிவு மற்றும் பட்டப்படிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதாகும். தோ்வா்களின் நலன் கருதி, முதல்முறையாக பாடத் திட்டத்தில் அலகு வாரியாக கேட்கப்படும் கேள்விகளின் எண்ணிக்கை தோ்வு அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.

வைகை அணையைத் தூா்வார வலியுறுத்தல்

மாணவிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞா் கைது

இளைஞரைக் கொன்ற பழக்கடை உரிமையாளா் கைது

முதுகலை பட்டதாரி ஆசிரியா் தோ்வு: குமரி மாவட்டத்தில் 7,413 போ் பங்கேற்பு

மக்களின் வரிப் பணம் வீணாவதை ஏற்க முடியாது: செல்லூா் கே. ராஜூ

SCROLL FOR NEXT