மிஸ் பண்ணிடாதீங்க... ஐடிபிஐ வங்கியில் 676 இளநிலை உதவி மேலாளர் பணி!
ஐடிபிஐ வங்கியில் நிரப்பப்பட உள்ள 676 இளநிலை உதவி மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வங்கி பணியில் சேருவதே குறிக்கோளாக வைத்து படித்து வரும் இளைஞர்களுக்கு வாய்ப்பாக, மத்திய அரசு மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துக்கு (எல்ஐசி) சொந்தமான ஐடிபிஐ வங்கியில் நிரப்பப்பட உள்ள 676 இளநிலை உதவி மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். 3/2025-26
பணி: Junior Assistant Manager -
காலியிடங்கள்: 676
சம்பளம்: ஆண்டுக்கு ரூ.6.5 லட்சம்
தகுதி:குறைந்தது 60 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 1.5.2025 தேதியின்படி 21 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வரம்பில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளி பிரிவினர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர்களுக்கு அரசு விதிமுறைப் படி சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு,நேர்முகத்தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு இளநிலை உதவி மேலாளர் பணி வழங்கப்படும்.
தேர்வு மையம்: தமிழ்நாட்டில் கோவை, சென்னை, மதுரை, ஈரோடு, நாகர்கோவில்,சேலம், தஞ் சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் ஆகிய இடங்களில் தேர்வு நடை பெறும்.
தேர்வு நடைபெறும் தேதி: 8.6.2025
விண்ணப்பக் கட்டணம்: 1050. எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு ரூ.250. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.idbibank.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்தற்கான கடைசி நாள்: 20.5.2025