வங்கியில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!
பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் காலியாகவுள்ள மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தொடர்பாக...
புது தில்லியை தலைமையிடமாகக் கொண்டும் செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கியான பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் காலியாகவுள்ள மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 26 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: MSME Relationship Managers
காலியிடங்கள்: 30
Advertisement
Advertisement
வயது வரம்பு: 25 முதல் 33-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சந்தையியல், நிதியியல் பிரிவில் எம்பிஏ முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர்களுக்கு ரூ.850. இதர அனைத்து பிரிவினர் ரூ.100 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://punjabandsind.bank.in என்ற இணையதளம். மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 26.11.2025
மேலும் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
PSB RECRUITMENT OF MSME RELATIONSHIP MANAGER ON CONTRACTUAL BASIS IN THE BANK
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.