பேக்கரி பொருள்கள் தயாரித்தல் பயிற்சி Center-Center-Delhi
வேலைவாய்ப்பு

பேக்கரி பொருள்கள் தயாரித்தல் பயிற்சிக்கு விண்ணப்பிப்பது எப்படி?

தினை வகைகள் கொண்டு பேக்கரி பொருள்கள் தயாரித்தல் பயிற்சி தமிழ்நாடு அரசால் 3 நாள்கள் வழங்கப்படுவது தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

தினை வகைகள் கொண்டு பேக்கரி பொருள்கள் தயாரித்தல் பயிற்சி தமிழ்நாடு அரசால் 3 நாள்கள் வழங்கப்படுகிறது.

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், 3 நாள்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் தினை வகைகள் கொண்டு பேக்கரி பொருள்கள் தயாரித்தல் பயிற்சி வரும் 25.11.2025 முதல் 27.11.2025 தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த பயிற்சியில் பேக்கரி பொருள்களின் கோதுமை வெண்ணெய் பிஸ்கட், தினை பால் பிஸ்கட், தினை ஜீரா குக்கீ, செரிமான குக்கீகள், ராகி நட்ஸ் குக்கீகள், மல்டிமில்லட் குக்கீகள், சோளம் சாக்லேட் பிஸ்கட், கம்பு நெய் பிஸ்கட், கருப்பு கவுனி பாதாம் குக்கீ, தினை ஓமம் பிரவுன் குக்கீ, பிரவுன் ஓமம் பிரவுன் குக்கீ, ராகி, சாமாமில் பிரவுன் குக்கீ ஃபட்ஜி பிரவுனி, ​​கருப்பு கவுனி பிரவுனி, ​​டபுள் சாக்லேட் பிரவுனி, ​​கோதுமை வெண்ணிலா பஞ்சு, ராகி சாக்லேட் கேக், தினை வாழை கேக், சோளம் கேரட் இலவங்கப்பட்டை கேக், முழு கோதுமை ரொட்டி, ராகி தினை ரொட்டி, மல்டிமில்லட் ரொட்டி, பால் ரொட்டி வகைகள் எப்படி தயாரிப்பது குறித்து இந்த பயிற்சியில் விளக்குவார்கள். மேலும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்படும்.

இந்த பயிற்சியில் 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்சம் பத்தாவது தேர்ச்சி பெற்ற ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (இருபாலரும்) விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சியில் பங்குபெற வருபவர்களுக்கு குறைந்த வாடகையில் தங்கும் விடுதி வசதியும் உள்ளது. தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

இந்த பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்கள் தேவைப்படுவோர் www.editn.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை படித்து தெரிந்து கொள்ளலாம்.

மேலும், அலுவலக வேலை நாள்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 600 032 என்ற முகவரியிலோ அல்லது 86681 02600 / 99436 85468 தொலைபேசி , கைபேசி எண்கள் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.

பயிற்சியில் பங்குபெறுபவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியில் பங்குபெற முன்பதிவு அவசியம்.

இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்

How to apply for Millet Bakery products Training Programme?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2026-இல் 17 நாள்கள் பொது விடுமுறை: புதுச்சேரி அரசு அறிவிப்பு

மும்பையில் சி.என்.ஜி. குழாய் சேதத்தால் கேஸ் விநியோகம் பாதிப்பு!

இரவில் சென்னை, 12 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் 2026 இல் கூட்டணி ஆட்சி அமையும்: பிரேமலதா விஜயகாந்த்

காதல் சடுகுடு... அனுபமா பரமேஸ்வரன்!

SCROLL FOR NEXT