பரோடா வங்கி 
வேலைவாய்ப்பு

பரோடா வங்கியில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

பரோடா வங்கியில் காலியாகவுள்ள 56 மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

பரோடா வங்கியில் காலியாகவுள்ள 56 மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து அக்.10 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்: BOB/ HRM/ REC/ADVT/2025/13

பணி: Manager

1. Trade Finance Operations

காலியிடங்கள் : 14

வயது வரம்பு: 24 முதல் 34-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 93,960

தகுதி : ஏதாவதுதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் Trade Finance Operations-இல் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. Forex Acquisition & Relationship

காலியிடங்கள்: 37

வயது வரம்பு : 26 முதல் 36-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 93,960

தகுதி : ஏதாவதுதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் பொது, தனியார், வெளிநாட்டு வங்கிகளில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் மற்றும் Trade Finance Operations-இல் 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Senior Manager (Forex Acquisition & Relationship)

காலியிடங்கள்: 5

வயது வரம்பு: 29 முதல் 39-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 1,05,280

தகுதி: ஏதாவதுதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் எம்பிஏ நிதி, சந்தைப்படுத்தல், வங்கி, விற்பனை பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகள், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகள் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர்களூக்கு ரூ. 850. இதர பிரிவினர் மற்றும் பெண்களுக்கு ரூ. 175. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.bankofbaroda.bank.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்காந கடைசி நாள்: 9.10.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

RECRUITMENT OF HUMAN RESOURCE ON REGULAR BASIS FOR VARIOUS DEPARTMENTS IN BANK OF BARODA Only Candidates willing to serve anywhere in India, should apply

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏக்கறவு என்னும் ஒரு சொல்

உயிர் போனபின் உணர்வற்ற உடல்

முதுபெரும் எழுத்தாளர் கொ.மா. கோதண்டம் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சின்னஞ்சிறு அலை... ஜனனி குணசீலன்!

வண்ணப் பறவை... கரிஷ்மா தன்னா!

SCROLL FOR NEXT