இந்திய ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 368 துறை கட்டுப்பாட்டாளர் (Section Controller) பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 14 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: CEN 04/2025
பணி: Section Controller
காலியிடங்கள்: 368
சம்பளம்: மாதம் ரூ.35,400
வயது வரம்பு: 1.1.2026 தேதியின்படி பொதுப்பிரிவினர் 20 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி ஓபிசி பிரிவினர்களுக்கு ரயில்வே விதிமுறைப்படி வயது வரம்பு சலுகை தரப்படும்.
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, மருத்துவ தகுதித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வுக்கான வினாத்தாள் பட்டப்படிப்பு தரத்தில் Reasoning, Analytical and Mathematical Capability, Logical Capability பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.
எழுத்துத் தேர்வு குறித்த விவரம் மூலம் தகுதியானவர்களுக்கு இ-கால் கடிதம் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், திருநங்கைகள் ரூ.250 செலுத்த வேண்டும். இதர அனைத்து பிரிவினர்களும் ரூ.500 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.rrbchennai.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14.10.2025
விண்ணப்பிக்க தேவையான விபரங்கள் விரைவில் ரயில்வே இணையதளத்தில் வெளியிடப்படும்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Indian Railway Recruitment of Section Controller Post
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.