தென் மத்திய ரயில்வேயில் சாரண மற்றும் சாரணியர் பயிற்சி பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 19 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். RRC/SCR/S&G Quota/02/2025
பணி: Scouts & Guides Quota/ 2025 - 26
காலியிடங்கள்: 14
சம்பளம்: மாதம் 7-வது ஊதியக்குழு விதிமுறைப்படி வழங்கப்படும்.
வயது வரம்பு: 19.10.2025 தேதியின்படி 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு தலா 5 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது ஐடிஐ தேர்ச்சி அல்லது +2 தேர்ச்சி பெற்றிருப்பதுடன் சாரண மற்றும் சாரணியர் அமைப்பில் குறைந்தது 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்து பயிற்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தேசிய அளவில், மாநில அளவில் நடைபெற்ற 2 சாரண மற்றும் சாரணியர் நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் சாரண மற்றும் சாரணியர் அமைப்பில் விண்ணப்பதாரரின் அனுபவம், சாதனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். பணியில் சேர்ந்த 2 ஆண்டுக்குள் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் என்ற வேகத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர்களுக்கு ரூ.500. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்கள், பெண்கள், திருநங்கைகள், சிறுபான்மையினர்களுக்கு ரு.250. கட்ட ணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.scr.indianrailways.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பித்தவுடன் தேவையான சான்றிதழ்களில் சுய சான்றெப்பம் செய்யப்பட்ட நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 19.10.2025
மேலும் முழுமையான விபரங்கள் அறிய மேற்கண்ட இணையதளத்திற்கு சென்று தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.