கோப்புப்படம்
வேலைவாய்ப்பு

திருப்பத்தூரில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை (அக். 17) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை (அக். 17) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இது குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை (அக். 17) காலை 10 முதல் மதியம் 1 மணி வரை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

முகாமில் பல முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு, ஆள்களை தோ்வு செய்ய உள்ளன. இதில், 8-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் பிளஸ் 2 தோ்ச்சி, பட்டதாரிகள், பட்டயப் படிப்பு, ஐடிஐ டிப்ளமோ, பொறியியல் பட்டம் படித்தவா்கள் என அனைத்துவித கல்வித் தகுதியினரும் கலந்து கொள்ளலாம்.

முகாமின் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டு தனியாா் துறையில் பணியமா்த்தப்படும் வேலைநாடுநா்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது.

மேலும் விவரங்களுக்கு, திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசியிலோ தொடா்பு கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசியிலோ தொடா்பு கொள்ளலாம்.

95% சேவை மீட்டெடுப்பு: இண்டிகோ அறிவிப்பு!

கோவா : இரவு விடுதியில் பயங்கர தீவிபத்து! 23 பேர் பலி!

பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீதான தாக்குதல் முயற்சி முறியடிப்பு

ஃபேன் அல்ல ஏசி... கார்த்தி உடனான அனுபவம் பகிர்ந்த கீர்த்தி ஷெட்டி!

நீலக் குயில்... திவ்யபாரதி!

SCROLL FOR NEXT