இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 
வேலைவாய்ப்பு

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மேலாளர் பணி: பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அலுவலர்(Specialist Officer)பணியிடங்களுக்கு தகுதியும் பணி அனுபவமும் ...

இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அலுவலர்(Specialist Officer)பணியிடங்களுக்கு தகுதியும் பணி அனுபவமும் உள்ள பட்டதாரிகளிடம் இருந்து வரும் அக்டோபர் 3 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: HRDD/RECT/03/2025-26

பணி: Specialist Officers (Senior Manager, Manager)

காலியிடங்கள்: 127

சம்பளம்: மாதம் ரூ.64,820 - 93,960

வயது வரம்பு : 1.9.2025 தேதியின்படி Senior Manager பணிக்கு 30 முதல் 40 வயதிற்குள்ளும், Manager பணிக்கு 25 வயது முதல் 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி வயது வரம்பு சலுகை வழங்கப்படும். பணி அனுபவத்திற்கேற்பவும் வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.

தகுதி: பொறியியல் துறையில் Computer Science, IT, Electronics, Electrical, Communication போன்ற ஏதாவதொரு பிரிவில் பிஇ., பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது நிதி, மார்க்கெட்டிங் துறையில் எம்பிஏ, எம்சிஏ, பிஜிடிஎம் முடித்திருக்க வேண்டும். IT, Cyber Security, Artificial Intelligence, Data Science போன்ற பிரிவுகளில் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். Architecture பிரிவிற்கு பி.ஆர்க் முடித்திருக்க வேண்டும். மேற்கண்ட தகுதியுடன் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் 1 முதல் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டிய வங்கித் துறைகள் குறித்து அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரரின் பணி அனுபவம் மற்றும் தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வுக்கு அழைக்கப்பட்டு அதனடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். இது குறித்த விபரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்சி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு ரூ.175. இதர அனைத்து பிரிவினர் ரூ.1000 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.iob.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 3.10.2025

மேலும் முழுமையான விபரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

IOB invites online applications from qualified and experienced professionals for recruitment against 127 Vacancies for Specialist Officers for the various posts in MMG Scale II and III.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - கன்னி

வார பலன்கள் - சிம்மம்

வார பலன்கள் - கடகம்

சிம்பு - 49 அப்டேட்! ஆவலுடன் காத்திருக்கும் கூட்டணி?

வார பலன்கள் - மிதுனம்

SCROLL FOR NEXT