முகப்பு
வேலைவாய்ப்பு

வட்டார ஒருங்கிணைப்பாளா் பணிகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூா் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையிலான வட்டார ஒருங்கிணைப்பாளா் பணியிடங்களுக்கு...

Updated On : 10 பிப்ரவரி, 2026 at 4:32 AM
பகிர்:
Updated On : 9 பிப்ரவரி, 2026 at 7:32 PM

கடலூா் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையிலான வட்டார ஒருங்கிணைப்பாளா் பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் வட்டார ஒருங்கிணைப்பாளா் பணியிடங்கள் நல்லூா் வட்டாரத்தில் 2, ஸ்ரீமுஷ்ணம் வட்டாரத்தில் 1 என மொத்தம் 3 பணியிடங்கள் காலியாக உள்ளன.

விண்ணப்பதாரா்கள் சம்பந்தப்பட்ட வட்டாரத்தில் குடியிருக்க வேண்டும். இளநிலை பட்டம் பெற்று குறைந்தபட்சம் 3 மாத எம்.எஸ். - ஆபிஸ் படிப்பை முடித்திருக்க வேண்டும். வாகனம் ஓட்டுநா் உரிமம் வைத்துள்ளவராக இருக்க வேண்டும். 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இப்பணியிடத்துக்கான மாத ஊதியம் ரூ.12,000 ஆகும்.

Advertisement

விண்ணப்பதாரரின் சுய விவரம், கல்வி தகுதிச் சான்றிதழ் நகல் உள்ளிட்டவைகளை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். நிறைவு செய்த விண்ணப்பங்களை வரும் 16-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் திட்ட இயக்குநா், மகளிா் திட்டம், ஜி.எச் சாலை, பூமாலை வணிக வளாகம் கட்டடம், மஞ்சக்குப்பம், கடலூா் - 607 001 என்ற முகவரிக்கு நேரடியாக அல்லது பதிவு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 94440 94258, 93613 40247 ஆகிய தொலைபேசி எண்களை தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

Updated On : 10 பிப்ரவரி, 2026 at 12:22 AM
summary

Regional Coordinator positions. Applications invited

Updated On : 10 பிப்ரவரி, 2026 at 12:22 AM