முகப்பு
வேலைவாய்ப்பு

டான்சி நிறுவனத்தில் ஓட்டுநர், அலுவலக உதவியாளர் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

சென்னையில் உள்ள தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனத்தில் (டான்சி-TANSI)காலியாகவுள்ள ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் குறித்து...

Updated On : 29 மார்ச் 2026, 5:20 pm IST
டான்சி நிறுவனத்தில் ஓட்டுநர், அலுவலக உதவியாளர் வேலை - டான்சி
பகிர்:

தமிழக அரசின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் தமிழ்நாடு சிறுதொழில் கழகத்தில் (டான்சி-TANSI) காலியாகவுள்ள ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து விபரங்களை பார்ப்போம்:

அறிவிப்பு எண்: 443/இபி/2025

Advertisement

பணி: ஓட்டுநர்

காலியிடங்கள்: 4

சம்பளம்: மாதம் ரூ.19,500 - ரூ.5.62,000

தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 18 முதல் 32-க்குள் இருக்க வேண்டும்.

பணி: அலுவலக உதவியாளர்

காலியிடங்கள்: 7

சம்பளம்: மாதம் ரூ.15,700 - ரூ.50,000

தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 32-க்குள் இருக்க வேண்டும்.

வயது வரம்பு சலுகை: உச்ச வயதுவரம்பில் எஸ்சி, எஸ்சி, எஸ்சிஏ பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், பிசி, எம்பிசி பிரிவினருக்கு 2 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம், தேதி குறித்த விவரங்கள் அழைப்புக் கடிதம் மூலமாக தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tansi.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 31.3.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

summary

TANSI Applications are invited for the post of Driver and Office Assistant at Chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.