அரசுப் பணிகள்

வேலை ரெடி... விண்ணப்பிக்க ரெடியா? தேசிய விண்வெளி ஆய்வகம் அழைப்பு

தினமணி


கர்நாடகம் மாநிலம், பெங்களூருவில் செயல்பட்டு வரும் தேசிய விண்வெளி ஆய்வகத்தில் காலியாக உள்ள 24 இளநிலை செயலக உதவியாளர், இளநிலை சுருக்கெழுத்தாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: தேசிய விண்வெளி ஆய்வகம் (National Aerospace Laboratories)

மொத்த காலியிடங்கள்: 24

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Junior Secretariat Assistant 

காலியிடங்கள்: 12

சம்பளம்: மாதம் ரூ.19900 - 63200

வயதுவரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 10, பிளஸ் 2 தேர்ச்சி அல்லது பியூசி தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் 30 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

கணினியில் எம்.எஸ். ஆபிஸ், எம்.எஸ். வேர்ட், எம்.எஸ். எக்செல், பவர் பாயிண்ட் போன்றவற்றில் பணிபுரியும் திறனும் கலை, அறிவியல்,வணிகப் பிரிவில் பட்டம் பெற்றிருந்தால் விரும்பத்தக்கது. 

பணி: Junior Secretariat Assistant (F&A)

காலியிடங்கள்: 05

சம்பளம்: மாதம் ரூ.19900 - 63200

வயதுவரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Junior Stenographer

காலியிடங்கள்: 07

சம்பளம்: மாதம் ரூ.25500 - 81,100

வயதுவரம்பு: 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 10, பிளஸ் 2 தேர்ச்சி அல்லது பியூசி தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதும் திறனுடன் அதனை கணினியில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

கணினியில் எம்.எஸ். ஆபிஸ், எம்.எஸ். வேர்ட், எம்.எஸ். எக்செல், பவர் பாயிண்ட் போன்றவற்றில்  பணிபுரியும் திறனுடன் கலை, அறிவியல் வணிகப் பிரிவில் பட்டம் பெற்றிருந்தால் விரும்பத்தக்கது. 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை:  https://www.nal.res.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.12.2020

மேலும் விவரங்கள் அறிய http://khoj.nal.res.in/Khojadmin/jsp/postdetails.jsp என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

120 லிட்டா் கள்ளச்சாராயம் பறிமுதல்: இளைஞா் கைது

மணல் கடத்தல்: இளைஞா் கைது

காா் மீது பேருந்து மோதல்: தம்பதி உயிரிழப்பு

சாலை விபத்தில் இறந்தவா் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி சாலை மறியல்

துணை கருவூல அலுவலகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா்

SCROLL FOR NEXT