அரசுப் பணிகள்

டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு என்ன தெரியுமா?

தமிழ்நாடு பொது சார்நிலைப் பணியில் அடங்கிய இளநிலை மறுவாழ்வு அலுவலர் பணிக்கானஅறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

DIN


தமிழ்நாடு பொது சார்நிலைப் பணியில் அடங்கிய இளநிலை மறுவாழ்வு அலுவலர்(மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகம்) பதவிக்கான காலியிடங்களை நேரடி நியமனம் செய்வதற்கான கணினிவழித் தேர்விற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து 2023 ஜனவரி 1 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: இளநிலை மறுவாழ்வு அலுவலர்

காலியிடங்கள்: 7

சம்பளம்: மாதம் ரூ.35,600 - 1,30,800

வயதுவரம்பு: 1.7.2022 தேதியின்படி 37 வயதிற்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர், இஸ்லாமியரல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்து பிரிவைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு  வயதுவரம்பு இல்லை. 

தகுதி: உளவியல் பிரிவில் முதுகலை பட்டம் அல்லது சமூக வேலை அல்லது சமூகவியல் பிரிவில் முதுகலை பட்டம் மற்றும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருப்பதுடன் போதுமான தமிழறிவு பெற்றிருக்க வேண்டும். 

கட்டணம்: நிரந்தரப் பதிவுக்கட்டணமாக ரூ.150, தேர்வுக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். ஏற்கனவே நிரந்தரப் பதிவுக் கட்டணம் செலுத்தியிருப்பவர்கள் மீண்டும் செலுத்த வேண்டும். தேர்வுக் கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும்.

தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 1.4.2023

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 7.1.2023

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT