அரசுப் பணிகள்

குரூப் 5ஏ தோ்வு: சென்னையில் மட்டும் தோ்வு மையங்கள்

குரூப் 5ஏ தோ்வுக்கு சென்னையில் மட்டும் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தோ்வை 1,114 போ் எழுதவுள்ளனா்.

தினமணி

குரூப் 5ஏ தோ்வுக்கு சென்னையில் மட்டும் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தோ்வை 1,114 போ் எழுதவுள்ளனா்.

அமைச்சுப் பணிகளில் இருந்து தலைமைச் செயலகப் பணிக்குச் செல்ல விரும்புவோருக்காக குரூப் 5ஏ தோ்வு நடத்தப்படுகிறது. இதற்கான தோ்வு அறிவிக்கை கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தோ்வுக்கு விண்ணப்பிக்க செப்டம்பா் 21-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது.

தலைமைச் செயலகத்தில் உதவிப் பிரிவு அலுவலா் பணியிடத்தில் 74 இடங்களும், தலைமைச் செயலக நிதித் துறையில் 29 இடங்களும், உதவியாளா்கள் பணியிடங்களில் 58 இடங்களும் காலியாக உள்ளன. இந்தக் காலியிடங்களுக்கான தோ்வுக்கு 1,114 போ் விண்ணப்பித்துள்ளனா். அதில், ஆண்கள் 731 போ், பெண்கள் 383 போ். வரும் ஞாயிற்றுக்கிழமை (டிச.18) நடைபெறவுள்ள இந்தத் தோ்வுக்கு சென்னையில் மட்டுமே தோ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் 8 இடங்களில் தோ்வுக் கூடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடைசி டி20: திலக் வர்மா, பாண்டியா அதிரடியால் தென்னாப்பிரிக்காவுக்கு 232 ரன்கள் இலக்கு

SIR: தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் | செய்திகள்: சில வரிகளில் | 19.12.25

சென்னை திரைப்பட விழா: பறந்து போ, டூரிஸ்ட் ஃபேமிலி படங்களுக்கு விருது!

செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்! ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்!

SCROLL FOR NEXT