அரசுப் பணிகள்

விண்ணப்பித்துவிட்டீர்களா..? டிஆர்டிஓ-இல் வேலை

கர்நாடகம் மாநிலம் மைசூரில் உள்ள டிஆர்டிஓ-அட்வான்ஸ்டு சிஸ்டம் லேப்- இல் (DRDO-Advanced Systems Lab)காலியாக உள்ள தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


கர்நாடகம் மாநிலம் மைசூரில் உள்ள டிஆர்டிஓ-அட்வான்ஸ்டு சிஸ்டம் லேப்- இல் (DRDO-Advanced Systems Lab)காலியாக உள்ள தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு வரும் 31 ஆம் தேதிக்குள் தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண். DFRL/HRD/2022/01

பயிற்சி: Graduate Apprentice/Technician Apprentice

காலியிடங்கள்: 19

தகுதி: பயிற்சி அளிக்கப்படும் பிரிவில் டிப்ளமோ, பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும். 2021 ஆம் ஆண்டிற்கு பிறகு படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். துறைவாரியான காலியிடங்கள் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: டிப்ளமோ, பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.

பயிற்சி காலம்: ஒரு ஆண்டு

விண்ணப்பிக்கும் முறை: www.mhrdnates.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பத்தாரரின் தகுதிகள் மற்றும் இதர விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பின்னர் தங்களது முழு விவரங்கள் அடங்கிய பயோடேட்டா, மதிப்பெண் சான்று நகல்கள் இணையதளத்தில் பதிவு செய்த சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து dfrlhrd@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 31.12.2022 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். 

மேலும் விவரங்கள் அறிய www.drdo.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளி மாணவா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

வீரவநல்லூரில் புதிய சாா்பதிவாளா் அலுவலகம் திறப்பு

மானூரில் வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி மாணவா்கள் போராட்டம்

முக்கூடலில் சாா் பதிவாளா் அலுவலகம் திறப்பு

புதிய தமிழகம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT