அரசுப் பணிகள்

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ராணுவத்தில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி!

இந்திய ராணுவத்தில் நிரப்பப்பட உள்ள 128 மத போதகர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான ஆண்களிடம் இருந்து நாளை ஞாயிற்றுக்கிழமை (நவ.6) ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள

DIN

இந்திய ராணுவத்தில் நிரப்பப்பட உள்ள 128 மத போதகர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து நாளை ஞாயிற்றுக்கிழமை(நவ.6) ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Religious Teacher (Junior Commissioned Officer)(PRT Course)

மொத்த காலியிங்கள்: 128

பணி: Pandit, Pandit(Gorkha), for Gorkha Regiments, Granthi 
காலியிடங்கள்: 121
தகுதி: சமஸ்கிருத மொழியில் ஆச்சார்யா பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது கரம் கந்த் சமய பாடப்பிரிவில் ஒரு ஆண்டு டிப்ளமோ முடித்து சாஸ்திரி தகுதி பெற்றிருக்க வேண்டும். 

பணி: Maulvi (Sunni) 
காலியிடங்கள்:  3

Maulvi (Shia) for Ladakh Scouts 
காலியிடங்கள்: 1
தகுதி: அரபிக் மவுலவி ஆலிம் அல்லது உருதுவில் ஆடிப் ஆலிம் தகுதி பெற்றிருக்க வேண்டும். 

பணி: Padre
காலியிடங்கள்: 2

Bodh Monk (Mahayana) for Ladakh Scouts
காலியிடங்கள்: 1
தகுதி: புத்த மத ஆசிரியர் பணிக்கான தகுதி பெற்றிருக்க வேண்டும். 
வயதுவரம்பு: 25 முதல் 36க்குள் இருக்க வேண்டும். 

உடற்தகுதி: உயரம் - 160 செ.மீ, மார்பளவு - 77 செ.மீ , உடல் எடை 50 கிலோ.

உடற்திறன் தகுதிகள்: 8 நிமிடங்களில் 1.6 கி.மீ., தூரத்தை ஓடி முடிக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 6 வாரம் ராணுவ பயிற்சியும், 11 வாரம் மத போதகர் பணிக்கான பயிற்சியும் அளிக்கப்படும். பின்னர் ராணுவத்தில் ஜூனியர் கமிஷன்டு ஆபீசர் அந்தஸ்தில் மத போதகர் பணி வழங்கப்படும். 

விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 6.11.2022


மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 10 விலையில் ஆவின் பாதாம் மிக்ஸ் பவுடா் அறிமுகம்

சாலையை சீரமைக்க கோரிக்கை

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பண மோசடி: இளைஞா் தற்கொலை

பா்னிச்சா் கடையில் பணம் கேட்டு மிரட்டியதாக விசிகவினா் மீது புகாா்

சுமைதூக்கும் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT