அரசுப் பணிகள்

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

சிபிஎஸ்இ பாடத்திட்டதின்கீழ் செயல்படும் மத்திய அரசுப் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையில் ஆசிரியராக பணிபுரிவதற்கு சிபிஎஸ்இ ஆல் நடத்தப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் (சிடெட்) தே

DIN


சிபிஎஸ்இ பாடத்திட்டதின்கீழ் செயல்படும் மத்திய அரசுப் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையில் ஆசிரியராக பணிபுரிவதற்கு சிபிஎஸ்இ ஆல் நடத்தப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் (சிடெட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மத்திய அரசால் நாடு முழுவதும் முக்கிய நகங்களில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. கேள்வித்தாள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டும் இருக்கும். மொழித்தாளில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் ஆகியவற்றில் ஏதாவது இரண்டை மட்டும் தேர்வு செய்ய வேண்டும். இந்த ஆண்டிற்கான மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாளாகும். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து விண்ணப்பிக்கவும்.

தேர்வு: Central Teacher Eligibility Test(CTET-2022)

CTET-PAPER-I ​தகுதி: 1 முதல் 5 ஆண் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியராக பணிபுரிய விரும்புவர்கள் பிளஸ் 2 தேர்ச்சியுடன் 50 சதவிகித மதிப்பெண்களுடன் இரண்டு ஆண்டு ஆசிரியர் பயிற்சி படிப்பை முடித்திருக்க வேண்டும். 

CTET-PAPER-II​ தகுதி:  6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியராக பணிபுரிய ஆங்கிலம், தமிழ், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன்  இளநிலை பட்டம் மற்றும் பி.எட் முடித்திருக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ஏதாவது ஒரு தாள் தேர்வு மட்டும் எழுத விரும்பவர்கள் ரூ.1000. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும். இரண்டு தாள் தேர்வையும் எழுதுபவர்கள் ரூ.1,200 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.600 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 

எழுத்துத் தேர்வு உத்தேசமாக டிசம்பர் 2022 அல்லது ஜனவரி 2023-க்கும் இடைப்பட்ட நாள்களில் நடைபெறும். 

விண்ணப்பிக்கும் முறை: www.ctet.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 24.11.2022

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வோடபோன் ஐடியா பங்குகள் 7% உயர்வு!

சஞ்சு சாம்சன் அரைசதம்: ஓமனுக்கு 189 ரன்கள் இலக்கு

வெடிகுண்டு மிரட்டல்: நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானம் சென்னையில் அவசர தரையிறக்கம்

நாகையில் விஜய் பிரசாரத்திற்கு காவல்துறை 20 நிபந்தனைகள்! | செய்திகள்: சில வரிகளில் | 19.9.25

ஆப்பிரிக்காவில் 2 லட்சத்தை நெருங்கும் குரங்கு அம்மை பாதிப்புகள்!

SCROLL FOR NEXT