அரசுப் பணிகள்

சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு... மத்திய அரசில் 990 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்திய வானிலை மையத்தில் 900 அறிவியல் உதவியாளர் காலியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எஸ்.எஸ்.சி வெளியிட்டுள்ளது.

DIN


இந்திய வானிலை மையத்தில் 900 அறிவியல் உதவியாளர் காலியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எஸ்.எஸ்.சி வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 18 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:  

பணி: SCIENTIFIC ASSISTANT

காலியிடம் : 990 

தகுதி: இயற்பியல் பிரிவில் பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும் அல்லது கணினி அறிவியல், ஐ.டி அல்லது எலக்ட்ரானிக்ஸ் டெலிகம்யூனிகேசன் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18.10.2022 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலுார்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம் ரூ. 100. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.

எழுத்துத் தேர்வு: டிசம்பர் 2022 இல் நடத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 18.10.2022

மேலும் விவரங்கள் அறிய https://ssc.nic.in அல்லது https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_IMD_30092022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

SCROLL FOR NEXT