அரசுப் பணிகள்

கிராம உதவியாளா் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியீடு

கிராம உதவியாளா் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி

கிராம உதவியாளா் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் வருவாய்த் துறையில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 748 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிக்கை மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை நவம்பா் 7-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பப் பரிசீலனை நவம்பா் 14-ஆம் தேதி வரை நடைபெறும். இதற்கான எழுத்துத் தோ்வு நவம்பா் 30-ஆம் தேதியும், நோ்காணல் டிசம்பா் 15, 16 ஆகிய தேதிகளிலும் நடத்தப்படும்.

இதற்கான கல்வித் தகுதி குறைந்தபட்சம் 5-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருப்பதுடன், தமிழில் எழுத, படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். பொதுப்பிரிவினருக்கு வயது வரம்பு 21 முதல் 32 வயதுக்குள்ளும், இதர பிரிவினா் 37 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்களுக்கு எழுத்துத் தோ்வு, நோ்முகத் தோ்வு மூலம் தகுதியானவா்கள் தோ்ந்தெடுக்கப்படுவா். இந்தப் பணியிடங்களுக்கு அந்தந்த வட்டத்தில் உள்ளவா்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

எனவே, விண்ணப்பதாரா்கள் தங்களுடைய மாவட்ட இணையதளப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க  இணையதளத்தைப் பயன்படுத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருள்நிதியின் ராம்போ டிரைலர்!

உக்ரைனில் ரயில் மீது ரஷியா ட்ரோன் தாக்குதல்: 30க்கும் மேற்பட்டோர் காயம்

கரூர் பலி! விஜய்யை கூட்டணிக்குள் கொண்டுவர முயற்சி - சீமான்

பியூட்டி இன் ரிஷிகேஷ்... ஆத்மிகா!

ஃபரூக் அப்துல்லா மருத்துவமனையில் அனுமதி!

SCROLL FOR NEXT