அரசுப் பணிகள்

10, ஐடிஐ முடித்தவர்களுக்கு தெற்கு ரயில்வேயில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு!

தெற்கு ரயில்வேயின் கோவை மாவட்டம், போத்தனூர், பாலக்காடு, சேலம், திருவனந்தபுரம் ஆகிய ரயில்வே பணிமனைகளில் மாதம் உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு தொழில் பழகுநர் பயிற்சி

தினமணி


தெற்கு ரயில்வேயின் கோவை மாவட்டம், போத்தனூர், பாலக்காடு, சேலம், திருவனந்தபுரம் ஆகிய ரயில்வே பணிமனைகளில் மாதம் உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு தொழில் பழகுநர் பயிற்சிக்கு பத்தாம் வகுப்பு, ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Trade Apprentice

காலியிடங்கள்: 1,284

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி, பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பயிற்சி அளிக்கப்படும் தொழிற்பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். பத்தாம் வகுப்பில் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு 15 முதல் 22 வயதிற்குள் இருக்க வேண்டும். ஐடிஐ முடித்தவர்களுக்கு 15 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: பத்தாம் வகுப்பு, ஐடிஐ படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

உதவித் தொகை: பயிற்சியின்போது பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு மாதம் ரூ.6000, ஐடிஐ முடித்தவர்களுக்கு மாதம் ரூ.7000 வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.sr.indianrailways.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 31.10.2022

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரைட் சகோதரர்கள் கண்டுபிடிப்புக்கு முன்பே புஷ்பக விமானம் இருந்தது! சிவராஜ் செளகான்

சாத்தூர் நகராட்சி குப்பை கிடங்கில் தீ! மூச்சுத்திணறலால் மக்கள் அவதி!

காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்! முதல்வர்கள் ஸ்டாலின், பகவந்த் மான் தொடங்கி வைத்தனர்!

25% கூடுதல் வரி நாளை முதல் அமல்..! அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்கா!

நிதி நெருக்கடி காரணமாக தில்லி மெட்ரோ ரயில் டிக்கெட் விலை உயா்வு

SCROLL FOR NEXT