கோப்புப்படம் 
அரசுப் பணிகள்

ரூ.1,30,800 சம்பளத்தில் தமிழ்நாடு அரசில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

இளநிலை மறுவாழ்வு அலுவலர்(மாற்றுத்திரனாளிகளுக்கான மாநில ஆணையரகம்) பதவிக்கான காலியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான கணினிவழித் தேர்விற்கான அறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


தமிழ்நாடு பொது சார்நிலைப் பணியில் அடங்கிய இளநிலை மறுவாழ்வு அலுவலர்(மாற்றுத்திரனாளிகளுக்கான மாநில ஆணையரகம்) பதவிக்கான காலியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான கணினிவழித் தேர்விற்கான அறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு வரும் 7 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண்.641 அறிக்கை எண்:35/2022

பணி: இளநிலை மறுவாழ்வு அலுவலர்(Junior Rehabilitation Officer )

காலியிடங்கள்: 7

சம்பளம்: மாதம் ரூ.35,600 - 1,30,800

வயது வரம்பு: 1.7.2022 தேதியின்படி, அதிகபட்ச வயதானது 37 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயதுவரம்பு சலுகைகள் அறிய அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தகுதி: அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் உளவியல், சமூக வேலை அல்லது சமூகவியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் கணினி வழி ஆன்லைன் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் இட ஒதுக்கீடு விதிகளின் படி தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் www.tnpscexams.in/ www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 7.1.2023 ஆம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்: நிரந்தப் பதிவுக் கட்டணம் - ரூ.150, தேர்வுக் கட்டணம் ரூ.100. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். 

நிரந்தர பதிவில் பதிவு செய்த நாளில் இருந்து 5 ஆண்டு  கள் முடிவுறாத விண்ணப்பதாரர்கள் இத்தேர்வுக்கான நிரந்த பதிவுக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றனர். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 7.1.2023

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மும்பை மோனோரயில் விபத்து: ரயிலில் இருந்த 400-க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக மீட்பு!

மலரே குறிஞ்சி மலரே... ஐஸ்வர்யா சர்மா!

ரஷியாவில் ஜெய்சங்கர்! இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை

வெண்மேகம்... தமன்னா!

மஞ்ச காட்டு மைனா... ஜியா ஷங்கர்!

SCROLL FOR NEXT