அரசுப் பணிகள்

ரூ.1,38,000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசில் வேலை வேண்டுமா? 

தோட்டக்கலை அலுவலர் பதவிகளுக்கான காலிப் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்)டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.

தினமணி


தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்கப் பணிகளில் அடங்கிய வேளாண்மை அலுவலர், வேளாண்மை உதவி இயக்குநர்(விரிவாக்கம்) மற்றும் தமிழ்நாடு தோட்டக்கலைப் பணிகளில் அடங்கிய தோட்டக்கலை அலுவலர் பதவிகளுக்கான காலிப் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: வேளாண் அலுவலர்(விரிவாக்கம்) 
காலியிடங்கள்: 33+4(முண்கொணர்வு) 
சம்பளம்: மாதம் ரூ.37,700 - 1,38,500

பணி: வேளாண்மை உதவி இயக்குநர்
காலியிடங்கள்: 8
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 2,06,700

பணி: தோட்டக்கலை அலுவலர்
காலியிடங்கள்: 41+7(முண்கொணர்வு) 
சம்பளம்: மாதம் ரூ.37,700 - 1,38,500

தகுதி: வேளாண்மை பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள், முதுகலை பட்டம் அல்லது முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 1.7.2023 தேதியின்படி 32 வயதிற்குள் இருக்க வேண்டும். சலுகைகள் குறித்து அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பக் கட்டணம்: நிரந்தர பதிவுக் கட்டணம் ரூ.150,  தேர்வுக் கட்டணம் ரூ.200. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். கட்டணச் சலுகையை அறிவிப்பில் தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு, நேர்முகத் தேர்வு, வாய்மொழித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpscexams.in / ww.tnpsc.gov.in ஆகிய இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வு நடைபெறும் நாள்: 20.5.2023

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.2.2023

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் சென்ற மலைப்பாம்பை கையில் பிடித்த நபர்! திடீரென கடித்ததால் பரபரப்பு!

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

SCROLL FOR NEXT