பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
எஸ்எஸ்எல்சி தோல்வி, தோ்ச்சி மற்றும் அதற்கு மேலான கல்வித் தகுதிகள் பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவைத் தொடா்ந்து புதுப்பித்து 31.12.2022-இல் 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞா்களுக்கு தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்திருந்தால் போதுமானது.
இதற்கான விண்ணப்பம் பெற விரும்பும் மனுதாரா்கள் தங்களது வேலைவாய்ப்பு அடையாள அட்டையை ஆதாரமாக காண்பித்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பிப். 28 ஆம் தேதி வரை அலுவலக வேலை நாள்களில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கும் வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை திட்டப் பிரிவில் அசல் கல்விச் சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகத்துடன் சமா்ப்பிக்கலாம்.
மேலும், உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகள் விதிமுறைகளுக்குள்பட்டு ஆண்டுதோறும் அளிக்க வேண்டிய சுய உறுதிமொழி ஆவணத்தை சமா்ப்பிக்க பிப். 28 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.