அரசுப் பணிகள்

எல்லை பாதுகாப்புப் படையில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்?

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்புப் படையில் கான்ஸ்டபிள் (ஓட்டுநர்) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்புப் படையில் கான்ஸ்டபிள் (ஓட்டுநர்) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு முடித்த இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Constable (Driver)

மொத்த காலியிடங்கள்: 458 (எஸ்சி-74, எஸ்டி-37, ஒபிசி-110, பொது-195, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர்-42).

சம்பளம்: ரூ.25,500 - 69,100.

வயது வரம்பு: 26.7.2023 தேதியின்படி 21 முதல் 27க்குள் இருக்க வேண்டும். வயது வரம்பில் எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு வழங்கப்படும்.

தகுதி: குறைந்த பட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். அதில் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

உடற் தகுதி: குறைந்தபட்சம் 170 செ.மீட்டர் உயரமும், மார்பளவு சாதாரண நிலையில் 80 செ.மீட்டரும், 5 செ.மீட்டர் சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.

எஸ்டி பிரிவைச் சேர்ந்த ஆண்கள் குறைந்தபட்சம் 162.5 செ.மீட்டர் உயரமும், மார்பளவு சாதாரண நிலையில் 76 செ.மீட்டரும், 5 செ.மீட்டர் சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும். அனைத்து விண்ணப்பதாரர்களும் உயரத்திற்கேற்ற எடை மற்றும் ஆரோக்கியமான உடற்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்புப் படையால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, ஓட்டுநர் திறன் தேர்வு, உடற்திறன் தேர்வு, உடற்தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். பத்தாம் வகுப்பு தகுதி அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும். கேள்விகள் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும்.

உடல் திறன் தேர்வில் 1.6 கி.மீட்டர் தூரத்தை 6 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும்.

கட்டணம்: பொது, ஒபிசி, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www.recruitment.itbpolice.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு file:///C:/Users/DOTCOM/Downloads/239.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 26.7.2023.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமா் பிறந்த நாள்: பாஜக கொண்டாட்டம்

பாலிடெக்னிக் கல்லூரி நிா்வாகத்தை கண்டித்து போராட்டம்

தீபாவளி பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் இந்நாள், முந்நாள் அமைச்சா்கள் மீதான வழக்குகள் கைவிடப்படவில்லை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணபத்திரம் தாக்கல்

பாமக நிறுவனா் ராமதாஸ் தரப்பில் தோ்தல் ஆணையத்திடம் புகாா் மனு

SCROLL FOR NEXT