அரசுப் பணிகள்

ரூ1,77,500 சம்பளத்தில் இந்திய நாடாளுமன்றத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்?

தினமணி


இந்திய நாடாளுமன்றத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள காலியாக உள்ள 13 மொழிப்பெயர்ப்பாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: மொழிப்பெயர்ப்பாளர் (Parliamentary Interpreter)

காலியிடங்கள்: 13

சம்பளம்: மாதம் ரூ. 56100 -177500

தகுதி: இளநிலை வரை இந்தியை கட்டாய, விருப்ப மொழிப்பாடமாக எடுத்து படித்து, ஆங்கில பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது இளநிலை வரை ஆங்கிலத்தை கட்டாய, விருப்ப மொழிப் பாடமாக எடுத்து படித்து, இந்தி பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 35 வயதை பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, மொழிபெயர்ப்பு தேர்வு, நேர்முகத் தேர்வு, சொற்பொழிவு தேர்வு என நான்கு நிலைகளாக தேர்வுகள் நடத்தப்பட்டு அதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: https://loksabha.nic.in/ → Recruitment → Apply Online என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 3.4.2023

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சபரிமலை கோயில் நடை திறப்பு!

முகூர்த்தம், வார விடுமுறை நாள்கள்: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை: தெலுங்கு தேசம் வேட்பாளர் மீது தாக்குதல்!

டி20 தொடரை வெல்லப்போவது யார்?

தூத்துக்குடி மாவட்டத்துக்கு மே 22-ல் உள்ளூர் விடுமுறை!

SCROLL FOR NEXT