அரசுப் பணிகள்

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... எஸ்பிஐ வங்கியில் 8,283 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

வங்கிகளின் முதன்மை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் வாடிக்கையாளர் ஆதிரவு மற்றும் விற்பனை பிரிவில் காலியாக உள்ள 8,283 ஜூனியர்

தினமணி


வங்கிகளின் முதன்மை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் வாடிக்கையாளர் ஆதிரவு மற்றும் விற்பனை பிரிவில் காலியாக உள்ள 8,283 ஜூனியர் அசோசியேட்ஸ் பதவியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து டிசம்பர் 7 ஆம் தேதிக்குள் இனையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். CRPD/CR/2023-24/27

பதவி: Junior Associate

காலியிடங்கள்: 8,283

சம்பளம்: மாதம் ரூ.17,900 - 47,920

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.4.2023 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

முதல்நிலைத் தேர்வு 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலும், முதன்மைத் தேர்வு 2024 பிப்ரவரி மாதத்திலும் நடைபெறும். தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

தேர்வுத்தாள் தமிழ், ஆங்கிலம், இந்தி மொழியில் அமைந்திருக்கும். 

தமிழ்நாட்டில் எழுத்துத் தேர்வு சென்னை, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, நாகர்கோவில், கோவை, சேலம், ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், வேலூர் ஆகிய இடங்களில் நடைபெறும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.750. இதனை இணையதளம் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.bank.sbi/careers என்ற இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை எதிர்கால பயன்பாட்டிற்காக பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 7.12.2023

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பனின் தமிழமுதம் - 65: காற்றுக் கொந்தளிப்பில் விமானங்கள்!

தன்னை வியத்தலினால் கேடு

போரை நிறுத்திய புலவர்கள்!

நீர்க்குமிழிபோல வாழ்க்கை

இந்த வாரம் கலாரசிகன் - 28-09-2025

SCROLL FOR NEXT