அரசுத் தேர்வுகள்

அஞ்சல் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? 

இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் சென்னை அஞ்சல் மோட்டார் சேவைக்கான Skilled Artisan பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு

DIN



இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் சென்னை அஞ்சல் மோட்டார் சேவைக்கான Skilled Artisan பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு டிசம்பர் 8 ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து வரும் 9 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து விண்ணப்பித்து பயனடையவும். 

பணி: Skilled Artisan

காலியிடங்கள்: 7

துறைவாரியான காலிடங்கள் விவரம்:  
1. M.V. Mechanic (Skilled) - 4
2. M.V. Electrician (Skilled) - 1
3. Copper & Tinsmith (Skilled) - 1
4. Upholster (Skilled) - 1

சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200

தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் தொடர்புடைய துறைகளில் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

எம்.வி.மெக்கானிக் பணிக்கு விண்ணப்பிப்போர் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.7.2022 தேதியின்படி, 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும். அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தேர்வு செய்யப்படும் முறை: தொழிற்முறைத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.indiapost.gov.in இல் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு பதிவு அஞ்சல், விரைவு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

முகவரி: மூத்த மேலாளர், அஞ்சல் ஊர்தி சேவை, எண்.37, கிரீம்ஸ் சாலை, சென்னை - 600 006

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 9.1.2023

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகள், ஏழைகளின் நலன்கள் மீதான தாக்குதல்: விபி ஜி ராம் ஜி குறித்து சோனியா காந்தி

கடனை முன்கூட்டியே அடைத்தால் சிபில் ஸ்கோர் குறையுமா?

செவிலியர்கள் போராட்டத்திற்கு காரணமே அதிமுக அரசுதான்: அமைச்சர் மா‌.சுப்பிரமணியன்

பாஜகவில் இணைந்த கமல்ஹாசன் பட நாயகி!

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

SCROLL FOR NEXT